2025 மே 19, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் தகவல் தொழிநுட்ப, சமூக ஒன்றுகூடல்

A.P.Mathan   / 2012 மே 15 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கான் பள்ளத்தாக்காக மாற்றுவது என்ற இலக்குடன் செயற்படும் "யாழ் ஐ.ரி. ஹப்" (Yarl IT Hub) அமைப்பு இரண்டு மாதங்களுக்கொரு முறை ஏற்பாடு செய்யும் தகவல் தொழிநுட்பட ஒன்றுகூடல் நிகழ்வுகளில் அடுத்த ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

அடுத்த ஒன்றுகூடல் 17ஆம் திகதியான வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ். பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வை "யாழ் ஐ.ரி. ஹப்" (Yarl IT Hub) அமைப்புடன் யாழ். பல்கலைக்கழகத்தின் கணினிச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் சிரேஷ்ட கணினி தொழிநுட்பவியலாளர்கள், சிரேஷ்ட மென்பொருள் கட்டமைப்பாளர்கள், கணினித்துறையினரின் கனவுத் தளமான சிலிக்கன் பள்ளத்தாக்கிலிருந்து கணினி வன்பொருள் வல்லுநர்கள், சிரேஷ்ட கணினி விரிவிரையாளர்கள் எனப் பலர் கலந்து தமது அனுபவங்களைப் பகிரவுள்ளனர். அத்துடன் மாணவர்களின் அமர்வுகளும் இடம்பெறும்.

போரால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பிரதேசம் தகவல் தொழிநுட்ட உலகில் இவ்வளவு காலமும் பிரவேசிக்க முடியாது காணப்பட்ட நிலையில் அப்பிரதேசத்தை தகவல் தொழிநுபட்ட உலகில் இணைப்பதோடு, தகவல் தொழிநுட்பட உலகின் மாற்றங்களில் பங்களிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "யாழ் ஐ.ரி ஹப்" (Yarl IT Hub) அமைப்புச் செயற்பட்டு வருகிறது.

இலாபநோக்கமற்ற, அரசியல் நோக்கமற்ற இவ்வமைப்பானது யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தகவல் தொழிநுட்ப உலகத்திற்கான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அடிப்படைய அம்சங்கள் அனைத்தும் அங்கு காணப்படுவதாகக் கருதுவதுடன், அதை மேம்படுத்துவதையே தங்கள் இலக்காகக் கொண்டுள்ளது.

ஏற்கனவே இவ்வமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆரம்ப தகவல் தொழிநுட்ப ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி அன்று இடம்பெற்றிருந்தது. ஏராளமானோர் அந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தனர்.

யாழ்ப்பாணத்தின் தகவல் தொழிநுட்ப நிலையை மேம்படுத்துவதற்கான முற்றுமுழுதாக இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுகூடலில் ஆர்வமுள்ளவர்களை அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளும் இவ்வமைப்பு, பதிவுகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் கீழ்வரும் முகவரியை அணுகுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. http://yarlithub.org/event.php

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X