2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2012 மே 16 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞரொருவருக்கு 7,500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன், வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தையும் 3 மாதகாலத்திற்கு பயன்படுத்த தடைசெய்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி க.ஜீவராணி நேற்று தீர்ப்பளித்தார்.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்நபர் ஆஜர்படுத்தப்பட்டபோது, இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தண்டம் விதித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை 3 மாதத்திற்கு பயன்படுத்த தடைசெய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மதுபோதையில் மோட்டார் சைக்கிள்; செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவினரால் இந்நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X