2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நுளம்பு பெருகும் விதமாக சுற்றுச் சூழலை வைத்திருந்த இரு நபர்களுக்கு அபராதம்

A.P.Mathan   / 2012 மே 16 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். கோண்டாவில் பகுதியில் நுளம்பு பெருகும் விதமாக சூற்றுச் சூழலை வைத்திருந்த இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

குறித்த நபர்கள் சூழலைப் பாதிக்கும் விதமாகவும் நுளம்பு பெருகி மக்களுக்கு நோய் கிருமியை பரவ விடுவதுமாக சூழலை வைத்திருந்தமையினால்; இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரம் கோப்பாய் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச இவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் ஒருவருக்கு 2000 ரூபா அபராதமும் மற்றையவருக்கு 1000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X