2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முள்ளிவாக்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு மக்களுக்கு த.தே.கூ. அழைப்பு

Menaka Mookandi   / 2012 மே 17 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

இறுதிக்கட்ட போரில் முள்ளிவாக்காலில் உயிரிழந்த உறவுகளின் ஆன்மா சாந்திப் பிராத்தனை ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாடில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மே 18இல் முள்ளிவாக்கால் பேரவலத்தில் உயிரிழந்த எமது உறவுகளின் ஆன்மா சாந்தியடைவதற்காக விசேட பிராத்தனை நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு யாழ்.மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் தங்களது உறவுகளுக்கு ஈகைச் சுடரேற்ற அனைவருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுப்பதாக அக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X