2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். நல்லூர் உற்சவ காலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பான கூட்டம்

Kogilavani   / 2012 மே 30 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

பாரம்பரிய வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் உற்சவம் எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பமாகவுள்ளதால் அக் காலங்களில்  நடைமுறைப்படுத்த வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் யாழ்.மாநகர சபை முதல்வரின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நல்லூர் உற்சவ காலங்களில் திரளும் மக்களின் தேவைகளை நிறைவு செய்யவும் போக்குவரத்தினை சீர்செய்யவும் ஆலயத்தின் சுற்றுச்சூழலும் ஆன்மீகம் மிக்க சூழலாக இருக்க வேண்டுமென யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

சுவாமி வீதிவலம் வரும் வீதி ஆன்மீக வீதியாக இருப்பதற்கு ஆலய சூழலில் வசிக்கம் மக்கள் ஒத்துழைக்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இக்கூட்டத்தில் ஆதின முதல்வர், பொதுமக்கள், நல்லூர் ஆலயத்தின் பிரதிநிதி யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா, யாழ். வர்த்தக சங்கத்தினர் இலங்கை மினசார சபை, இலங்கை செஞ்சிலுவை சங்கம் செஞ் ஜோன்ஸ அப்புலன்ஸ் அமைப்பினர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X