2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் தேசிய சமாதான பேரவையின் போருக்கு பின்னரான மாவட்ட செயற்பாட்டுக்குழு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 01 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


தேசிய சமாதானப் பேரவையின் போருக்குப் பின்னரான மாவட்ட செயற்பாட்டுக் குழு யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய சமாதானப் பேரவை இலங்கையில் 8 மாவட்டங்களை தெரிவுசெய்து அந்த மாவட்டங்களில் நடைபெறும் வன்முறைகள் தொடர்பான சம்பவங்களை அறிக்கையிட்டு உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தேசிய சமாதானப் பேரவை உறுப்பினர் சி.வைகுந்தன் தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவை தெரிவு செய்துள்ள 8 மாவட்டங்களில் வடமாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த  செயற்பாட்டுக் குழுவில் ஆசிரியர்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள், ஊடகவியலாளர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

தேசிய சமாதானப் பேரவையின் போருக்குப் பின்னரான மாவட்ட செயற்பாட்டுக் குழுவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுசரணை வழங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X