2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அடிப்படை வசதிகள் செய்து தரும்படி உதயபுரம் மீள்குடியேற்ற கிராமவாசிகள் கோரிக்கை

Menaka Mookandi   / 2012 ஜூன் 01 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழில் மீளக்குடியேற்றப்பட்ட உதயபுரம் கிராம மக்களுக்கு இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என ஜெ.89 கிராம மக்கள் யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் முறையிட்டுள்ளனர்.

மீளக்குடியேற்றப்பட்டு ஒரு வருடங்களாகியும் உதயபுரம் பகுதிக்கு வீதி அபிவிருத்தி செய்யப்படவில்லை எனவும் மின்சார வசதிகள், குடிநீர், சுகாதார சேவைகள் எதுவும் செய்யப்படாத நிலையில் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக அக்கிராம மக்கள் அரச அதிபரிடம் முறையிட்டுள்ளனர்.

இந்த மக்களின் வேண்டுகோள்கள் பிரதேச செயலரினூடாக நிறைவேற்றப்படும் எனவும் உடனடியாக எல்லாம் செய்ய வேண்டும் என அம்மக்கள் நினைப்பது கூடாது எனவும் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கான வழிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அரச அதிபர் தம்மிடம் தொரிவித்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X