2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 02 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி பண மோசடி செய்ததாகத் தெரிவிக்கப்படும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஒருவரை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிபதி மா.கணேசராச நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை இந்நபர்  லண்டன், கனடா உள்ளிட்ட ஜரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக கூறி அவர்களிடமிருந்து பண மோசடி செய்துள்ளார். ஆனைக்கோட்டை, உரும்பிராய், அச்சுவேலி, திருநெல்வேலி, கோப்பாய், சுன்னாகம் ஆகிய பிரதேசங்களைச் சேந்த இளைஞர், யுவதிகளிடம் இருந்து 50 இலட்சம் ரூபா பண மோசடி செய்துள்ளதாக விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர.;

இந்நபருக்கு எதிராக 8 பண மோசடி வழக்குகள் யாழ். நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. இவரைக் கைதுசெய்யுமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச உத்தரவிட்டமைக்கு அமைய விசேட குற்றத்தடுப்பு பொலிஸார்; தேடுதல் மேற்கொண்டனர். இந்நிலையில் சந்தேக நபர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ். நீதிவான் நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X