2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் யாழ். குடாநாட்டில் குற்றச் செயல்கள் குறைவடைந்துள்ளன: டி.ஐ.ஜி பெரேரா

Super User   / 2012 ஜூன் 02 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           
  (கவிசுகி, கிரிசன்)

பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் யாழ். குடாநாட்டில் குற்றச் செயல்கள் குறைவடைந்துள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஈ.எல். பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'யாழ். மாவட்டத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கைகளின் காரணமாக பாரிய குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் உடனடியாக புலனாய்வு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

யாழ். குடாநாட்டின் சென்ற வாரம் நடைபெற்ற குற்றச் செயல்கள் தொடர்பாக பட்டியல் படுத்தும் போது,

சாவகச்சேரியில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சிறுமி பாலியல் வல்லுறவு உட்படுத்தப்பட்டாரா என மருத்துவ அறிக்கைக்காக காத்து இருப்பதாகவும் அறிக்கை வந்தவுடன் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

சாவச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18,000 ரூபா பெறுமதியான கூரைத் தகரங்கள் திருடப்பட்டுள்ளது சந்தேக நபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகரப்பகுதியில் லாறியில் இருந்த வர்த்தக நிலையத்திற்கு செந்தமான 98 மா மூடைகளைத்திருடிய 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இரு இந்திய வியாபாரிகள் இனம் தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரிகளின் வியாபாரப் பொருட்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

யாழில் ஹெரோயின் விற்பனை மற்றும் நுகர்வு தொடர்பான சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக எதுவும் தெரிவிக்க முடியாது. ஏனெனில் இன்னும் பலர் கைது செய்யப்படவுள்ளனர்'  என்றார்.

இந்த பொலிஸாரின் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகநேசன், யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, மானிப்பாய் பொலிஸ் பரிசோதகர் காமினி, ஊர்காவற்துறை பொலிஸ் பரிசோதகர் காமினி பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X