2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். நடைபாதை வியாபாரத்தில் சட்டவிரோத சாராய விற்பனை; ஐவர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 07 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நகரப்பகுதியில் சட்டவிரோதமாக, அனுமதிப்பத்திரமின்றி சாராயம் விற்பனை செய்ய 5 பேர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஐந்து பேரும் சட்டவிரோதமான முறையில் சாராயங்களைக் கொள்வனவு செய்து அவற்றை நடைபாதை வியாபாரத்;தில் வைத்து விற்பனை செய்துள்ளனர். சிவிலில் சென்ற பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக இந்த ஐந்து பெரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடமிருந்து 20 போத்தல் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதினால் நாளை வெள்ளிக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X