2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் சமூகவிரோத குழுக்கள் ஆயுதங்களுடன் பாரிய கொள்ளையில் ஈடுபடுகின்றன: யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட

Kogilavani   / 2012 ஜூன் 09 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

சட்டவிரோத மற்றும் சமூகவிரோத குழுக்கள் சில யாழில் ஆயுதங்களுடன் இயங்கி பாரிய கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் அக்குழுக்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய சிரோஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.சிறிகுகநேசன் தெரிவித்தார்

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற வராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'யாழ்ப்பாணத்தில் ஆயுதம் தரித்த சமூகவிரோதக் குழுக்கள் அண்மையில் சாவகச்சேரி மற்றும் கொடிகாமப் பகுதியில் ஆயுதங்களுடன் சென்று வீட்டை உடைத்து பாரிய கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. இக்குழுக்கள் தொடர்பாக புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திற்கு போதைப் பொருளானது இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வருவது அவதானிக்கப்பட்டுள்ளது' என்றார்.

அதேவேளை, யாழ்.குடநாட்டில் சென்ற வாரம் நடைபெற்ற குற்றச் செயல்கள் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.சிறிகுகநேசன் தெரிவிக்கையில்,

'யாழ்ப்பாணத்தில் பாரிய குற்றச் செயல்கள் 14 நடைபெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரியில் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவு, கருக்கலைப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு, கத்தியால் குத்தி காயப்படத்தியமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன

யாழ். மடத்தடியில் இரு குழுக்களுக்கடையிலான மோதலை அடுத்து அப்பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் டான் தொலைக்காட்சியின் கேபிள்கள் இனம் தெரியாத நபர்களினால் அறுத்து எறியப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X