2025 மே 19, திங்கட்கிழமை

பெற்றோலிய கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் குழு யாழ். விஜயம்

Kogilavani   / 2012 ஜூன் 09 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

காங்கேசன் துறையில் உள்ள எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலையை யாழ். நகரை அண்மித்த பகுதியில் அமைப்பதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கு பொருத்தமான இடத்தினை ஆய்வு செய்வதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தலைவர் மேஜர் ஜெனரல் சொய்சா தெரிவிக்கையில், 

'போர் நடைபெற்ற காலத்தில் கடல் மார்க்கமாகவே குடாநாட்டுக்கான எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது போர் முடிந்த பின்னர் ஏ9 வீதியூடாக விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதால் எரிபொருள் களஞ்சியத்தினை யாழ். நகரை அண்டிய பகுதியில் அமைப்பதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

நவீன வசதிகளுடன் இந்த களஞ்சியத்தை அமைப்பதற்கும் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இதனை அமைக்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X