2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். மாவட்டத்தில் பிரதேச ரீதியாக பெற்றோல் நிரப்பும் நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் பிரேமஜயந்த

Super User   / 2012 ஜூன் 09 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

யாழ்.மாவட்டத்தில் பிரதேச ரீதியாக, பெற்றோல் நிரப்பும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை வடமாகாண பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமையாளர்களைச் சந்தித்து கலந்துரையாடும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,'யாழ்.குடாநாட்டிற்கு தென்பகுதியிலிருந்து வாகனங்களில் அதிகளவில் பயணிகள் வருகின்றனர். இதனால் யாழில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையங்கள் போதுமானதான இல்லை இதனால் யாழில் பெற்றோல் தேவையை நிவர்த்தி செய்வதற்கு பிரதேச ரீதியாக பெற்றோல் நிரப்பு நிலையங்களை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் சுமார் 200 பெற்றோல் நிரப்பு நிலையங்கள் இயங்கிகின்றன. அவற்றில் சில நிலையங்கள் மாத்திரமே இரவுபகல் சேவையை மேற்கொள்கின்றன. எனவே பெற்றோல் நிரப்பு நிலையங்களை அதிகரித்து வாகனங்களின் பெற்றோல் தேவையை பூர்த்தி செய்யவுள்ளோம்

மக்களின் தேவைகள் யாழில் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. யாழ்ப்பாண மக்கள் புதியரக வாகனங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது.

எரிபொருள் விலைகளில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என நினைக்கின்றோன் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை' என்றார்

இந்த விசேட சந்திப்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் யாழ்.பிராந்திய தலைவர் சண்மூகநாதன், பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X