2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். மடம் வீதிப் பகுதியில் பொலிஸ் காவலரண் அமைப்பு

A.P.Mathan   / 2012 ஜூன் 09 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
   
யாழ்ப்பாணம் மடம் வீதியில் அடிக்கடி குழுக்களுக்கிடையில் மோதல்கள் வெடிப்பதினால் அப்பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று இன்று சனிக்கிழமை மாலை அமைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.

யாழ். மடம் வீதிப் பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்குமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - யாழ். தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளமைக்கு அமைவாக இந்தக் காவரண் அமைக்கப்பட்டுள்ளது.

மோதலில் ஈடுபட்ட இருசாராரின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்ட பொலிஸார் கடந்த கால அழிவுகளில் இருந்து மீண்டு அபிவிருத்திகளை நோக்கி முன்னேறுகின்ற இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான மோதல்கள் மீண்டும்; மக்களுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதால் இப்பகுதியில் காவலரண் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் எந்தவிதமான மோதல்களுக்கும் இடமளிக்கக்கூடாது என இரு தரப்பினருக்கும் உணர்த்திய பொலிஸார் அண்மையில் நிகழ்ந்த மோதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களது விபரங்களையும் கோரியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X