2025 மே 19, திங்கட்கிழமை

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு அமைச்சரிடம் உருக்கமான வேண்டுகோள்

Super User   / 2012 ஜூன் 10 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யுத்த நடவடிக்கையின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருமாறும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி காணமல் போனவர்களின் உறவினர்கள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் கண்ணீருடன் யாழ்பாணத்தில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை யுத்ததினால் பாதிக்கப்பட்டு உயிழந்தவரகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் கலந்துகொண்டார்

இந்த நிகழ்வின் முடிவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் புகைப்படங்கள் சகிதம் அமைச்சரை சுற்றிவழைத்து, காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கோரி கண்ணீருடன் கதறியழுதனர்

"யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் எங்கு இருக்கின்றார்கள் அவர்கள் சிறைகளில் வைக்கப்பட்டு இருந்தால் எந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். எங்கள் பிள்ளைகளை எங்கு தடுத்து வைத்திருக்கின்றீர்கள் அவர்களை விடுதலை செய்ய உதவுங்கள்" என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கோரினர்.

இவர்களின் கோரிக்கையைச் செவிமடுத்த அமைச்சர், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தால், அவர்களின் வழங்குகளை துரிதப்படுத்தி நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

இதேவேளை, யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்கள் ஆகியோருக்கு  சுமார் 11.2 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது

யாழ்.மாவட்டத்தைச் சேந்த 91 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேருக்குமே இந்த நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அமைச்சரின் செயலாளர் திஸநாயக்கா, சிறைச்சாலை அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் சதீஸ்குமார், புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் யாழ். மாவட்டச் செயலர் சுந்தாரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X