2025 மே 19, திங்கட்கிழமை

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழ தலைவரின் உருவபெம்மை எரித்து ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 ஜூன் 11 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர்  கலாநிதி காமினி சமநாயக்காவின் உருவபெம்மை எரித்து யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட காலமாக இருந்து வரும் யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்கக் கோரியே இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

கடந்த காலங்களில் தங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படாமையினால் தாங்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் குதித்து இன்றை தினம் ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளோம் என யாழ்.பல்கலைக்கழக கல்வி சார ஊழியர் சங்க தலைவர் எஸ். தங்கராஜா தெரிவித்தார்.

தங்களின் சம்பள முரண்பாடுகளை தீர்த்து வைக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு பலமுறை கோரியும் அசமந்தமாக செயற்படுதாகவும் இதனால் தமது எதிர்வை வெளிப்படுத்தும் முகமாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழவின் தலைவர் காமினி சமநாயக்காவின் உருவபெம்மை எரித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0

  • najath Monday, 11 June 2012 03:25 PM

    என்ன பிரச்சினை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X