2025 மே 19, திங்கட்கிழமை

வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 14 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்தியப் பிரிவு நிபுணர் ஜெயக்குமாரின் வீட்டைத் தாக்கிய நபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் எஸ்.சிறிகுகநேசன் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பைச் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று எதுவும் தடயங்கள் உள்ளதாவென ஆராய்ந்ததுடன், அயல் வீடுகளிலுள்ளவர்களிடமும் விசாரணையை மேற்கொண்டுள்ளோமெனவும் அவர் கூறினார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X