2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். சிறைச்சாலையின் பெண் கைதிகளுக்கு தொழிற்பயிற்சி

Menaka Mookandi   / 2012 ஜூன் 14 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் சிறைக் கைதிகளுக்கு அவர்களின் தொழில் வாண்மையை விருத்தி செய்வதற்காக பனை அபிவிருத்தி சபையினால் இன்று வியாழக்கிழமை கைத்தொழில் பயிற்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 20 பெண் சிறைக் கைதிகளுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சுமார் ஆறுமாதகால பயிற்சியாக இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளதாக யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் செனரத் பண்டாரா தெரிவித்துள்ளார்.

இந்த கைத்தொழில் பயிற்சி ஆரம்ப நிகழ்வுக்கு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுள்ளார். அத்தோடு பருத்தித்துறை மாவட்ட நீதிவான் திருமதி சிறிநீதி நந்தசேனன், பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரெத்தினம், யாழ்.சிறைச்சாலை பிரதம ஜெயிலர் எஸ்.இந்திரகுமார், யாழ்.சிறைச்சாலை நலன்புரி உத்தியோகஸ்தர் கே.சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X