2025 மே 19, திங்கட்கிழமை

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு இன்று முதல் பொலிஸ் பாதுகாப்பு

Kogilavani   / 2012 ஜூன் 15 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.சிறிகுகநேசன் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் அலுவலகத்திற்கும் மற்றும் அவரது வீட்டுக்குமாக இரண்டு பொலிஸார் கடமையாற்றவுள்ளனர் எனவும் அவரது பாதுகாப்புக்காக விசேட பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிகுகநேசன் குறிப்பிட்டார்.

இதேவேளை பணிப்பாளருக்காக விசேட பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்றைய தினம் கடமையில் ஈடுபட்டுள்ளார்.

பொலிஸ் பாதுகாப்பு குறித்து வைத்தியசாலை பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

யாழில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாணைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் தேவையற்ற விதமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என தான் உணர்ந்து பொலிஸ் பாதுகாப்பு கோரியதாக பணிப்பாளர் திருமதி பாவானி பசுபதிராஜா கூறினார்.

தன்னை இடமாற்றம் செய்துள்ளதாக வெளியான செய்தியை மறுத்துள்ள அவர் எந்தவித மாற்றத்திற்கான கடிதங்கள் சுகாதார அமைச்சிடமிருந்து வரவில்லை எனவும் தான் தற்போதும் பணிப்பாளர் பதவியிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலையை நிர்வகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தான் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டதாகவும் நியாயப்பாடுகளை  பொலிஸாருக்கு எடுத்து விளக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X