2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வைத்தியர் இடமாற்றம் குறித்து விசாரணை நடத்தும் சுகாதார அமைச்சின் விசேட குழு

Menaka Mookandi   / 2012 ஜூன் 20 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து அண்மையில் இடமாற்றம் பெற்ற வைத்தியர் இராஜசேகரத்தின் இடமாற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சின் அலுவலகத்திலிருந்து விசேட விசாரணைக்குழு இன்று புதன்கிழமை வருகை தந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.

வைத்தியர் இராஜசேகரம் வருடாந்த இடமாற்றத்தைப் பெற்று யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்புக்கு மாற்றமாகியிருந்தார். இவரது இடமாற்றம் முறையற்ற விதமாக நடைபெற்றுள்ளதாக யாழ்.வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியமையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பவானி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு யாழ்.போதனா வைத்தியாவலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக சுகாதார அமைச்சின் அலுவலக அதிகாரி வனிகசூரிய தலைமையிலான 4பேர் கொண்ட விசாரணை அதிகாரிகள் குழு, யாழ்.போதனா வைத்தியசாலையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X