2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் போசாக்கு கண்காட்சி

Menaka Mookandi   / 2012 ஜூன் 29 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ் மாநகர சபையின் சுகாதார பணிமனையின் எற்பாட்டில் போசாக்கு வாரத்தை முன்னிட்டு தாய், குழந்தை மற்றும் கர்பிணித் தாய்மார்களின் சுகவாழ்வை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட போசாக்கு கண்காட்சியொன்று இன்று வெள்ளிக்கிழமை நாவலர் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இன்று காலை பத்து மணிக்க ஆரம்பமான அந்தக் கண்காட்சியை யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நாடாவை வெட்டி திறந்து வைத்தார். உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் மூலம் நிறைவான போசாக்கை பெறுவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.

சிறுவர்களின் நலன்கள், கர்ப்பிணித் தாய்மார் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் சிறுவர்கள் பராமரிப்பு போன்ற விடயங்கள் இங்கு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X