2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். நகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 ஜூன் 29 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், கிரிசன்)

யாழ் பிராந்திய பொலிஸ் மற்றும் பிராந்திய சுகாதார பணிமனை, மாநகர சுகாதாரப் பிரிவு ஆகியன இணைந்து யாழ் நகரத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் டெங்கு பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டன.

யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா திலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, யாழ் நகரத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் விடுதிகளில் இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது.

இதன்போது டெங்கு நுளம்பு உற்பத்தியாகக்கூடிய வகையில் கழிவுப் பொருட்கள் போடப்பட்டிருந்த வர்தக நிலையங்களின் உரிமையாளர்களிடம் அவற்றை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது.

அத்துடன் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக்கூடிய வகையில் பாவிக்கப்பட்ட போத்தல்கள், பொலித்தீன் பொருட்கள் வைத்திருந்த விடுதி உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று வியாழக்கிழமை கொழும்புத்துறை மற்றும் நாவாந்துறைப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 118 வீடுகளில் பொலிஸார் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதில் டெங்கு பரவக்கூடிய வகையில் வீட்டுச் சூழலை வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக உதவிப்பொலிஸ் பரிசோதகர் ஜெயந்த தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X