2025 மே 19, திங்கட்கிழமை

சட்டவிரோத மணல் ஏற்றிய நபருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 03 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் தனது  குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து யாழ். நீதிமன்ற நீதிபதி மா.கணேசராச 5,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

யாழ்ப்பாணத்தில்  சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மேற்படி நபர், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில்  நேற்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே நீதபதி இதற்கான தீர்ப்பளித்தார்.

இதேவேளை, நுளம்பு பெருகும் விதமாக சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதான நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 5,000 ரூபா அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X