2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர்

A.P.Mathan   / 2012 ஜூலை 04 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரி மாணவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமை தொடர்பாக, எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழில் ரீதியான தகுதி வாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழில் சங்கம் - யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கு யாழ். மாவட்டத்தில் மட்டும் நியமனம் வழங்கப்படாமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமனங்கள் வழங்கப்படுமிடத்து HNDA பட்டதாரிகளுக்கு மட்டும் நியமனம் வழங்க முடியாது என உயர் அதிகாரிகளால் கூறப்படுவது ஏற்க முடியாது எனவும், HNDA பட்டதாரிகளுக்கு நியமனம் ஏன் வழங்க முடியாது என எழுத்து மூலம் தெரியப்படுத்துமாறு தொழிற்சங்க செயலாளர் தேசசக்தி எம்.ஹுஸைன் முபாறக் கேட்டுக் கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X