2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு முகாமைத்துவ பீட பட்டதாரிகள் மகஜர்

A.P.Mathan   / 2012 ஜூலை 04 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

2011 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி பயிலுனர் ஆட்சேர்ப்பில் முகாமைத்துவ வணிகபீடப்; பட்டதாரிகளை உள்வாங்கப்படாமையை கண்டித்து முகாமைத்துவ பீட பட்டதாரிகள் இன்று புதன்கிழமை யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் பட்டப் படிப்பு முடிக்க வேண்டிய நாம் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாத காலப் பகுதியல் பட்டப்படிப்பினை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பட்டப்படிப்பு முடித்த 50 மாணவர்களும் வேலை வாய்ப்பு இன்றி இருப்பதாகவும், தம்மையும் பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கிக் கொள்ளுமாறும் பட்டதாரி மாணவர்கள்; யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைவாக 2011ஆம் ஆண்டின் காலப்பகுதி பட்டப்படிப்பு முடித்த காரணத்தினால் 4 மாதங்களை கருத்திற் கொள்ளாது தமக்கும் நியமனம் வழங்க ஆவண செய்யுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மகஜர் தொடர்பாக யாழ். மாவட்;ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் '5 வருடங்களிற்கு நியமனம் வழங்க முடியாது என்றும், அவ்வாறு நியமனம் வழங்க வேண்டுமானால் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடாக முகாமைத்துவ வணிக பீட அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும், அமைச்சர் ஊடாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவித்தல் வருமிடத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்ததாக முகாமைத்துவ வணிக பீட மாணவர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X