2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பிரித்தானிய நாடாளுமன்ற குழு யாழ் விஜயம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், ஜெ.டானியல்)

பிரித்தானிய நாடாளுமன்ற குழுவினர் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் யாழ் நகரை வந்தடைந்தனர். பாலாலியில் இருந்த உலங்கு வானூர்தி மூலம் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் வந்திறங்கினர்.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 18 பேர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர். யாழ்ப்பாணம் வந்த இக்குழுவினரை யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வரைவேற்றார்.

இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் இக் குழுவினர், யாழ். மாவட்டத்தின் தற்போதைய சூழ்நிலைகள் குறித்தும் அரியாலை, மற்றும் சாவகச்சேரி பகுதி மீள்குடியேற்றங்களை பார்வையிடவுள்ளதுடன் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .