2025 ஜூன் 21, சனிக்கிழமை

வட மாகாண கல்வி பணிப்பாளராக செல்வராஜா நியமனம்

Super User   / 2012 ஒக்டோபர் 04 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ். வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய செல்வராஜா வட மாகாண கல்வி பணிப்பாளராக ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் விக்னேஸ்வரன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இவருக்கான நியமன கடிதம்  கொழும்பில் வைத்து வட மாகாண ஆளுனரினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வட மாகாண மேலதிக கல்வி பணிப்பாளராக கடமையாற்றி உதயகுமார் யாழ். வலய கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .