2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

குகநாதனின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சர் டக்ளஸ்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 04 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். மாவட்டத்தின் உதவித் தேர்தல் ஆணையாளராகக் கடமையாற்றிய குகநாதன் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளார்.  அவரது இடமாற்றத்தில் எந்தவொரு அரசியல் தலையீடுகளும் இல்லையென பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஊடகவியலாரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் இடமாற்றம் பெறுவது தொடர்பில் நேரில் அவருடன் கதைத்ததாகவும் அதற்கு அவர் தனது சொந்த இடத்தில் கடமையாற்ற விரும்புவதாகவும் இதனால் தானே குறிப்பிட்ட இடமாற்றத்தை கேட்டுப் பெற்றதாகக் கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .