2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஜனவரியில் ஆசிரியர்களுக்கான இடமாற்றம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 26 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

ஆசிரியர்களுக்கான இடமாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்கப்படுமென்று வட மாகாண கல்வி பணிப்பாளர் ஆர்.செல்வராஜா இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ள 12 வலயத்திலும் இருந்து 1500 ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்து;ளளார்கள். அவர்களின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றதாக கூறினார்.

பரிசீலனைகளின் பின்னர் வன்னி பாடசாலைக்கு யாழ். மாவட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் இடமாற்றப்படுவர்கள். 5 வருட சேவைக்காலத்தினை பூர்த்தி செய்த ஆசிரியர்களே இடமாற்றப்படுவார்கள் என அவர் கூறினார்.

அதேவேளை, வன்னி பிரதேசத்தில் 5 வருட சேவைக்காலத்தினை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் விண்ணப்பத்தில்; குறி;ப்பிட்டவாறு கஷ்ட பிரதேசமாயின், 5 வருடத்திற்கும், வசதியான பிரசேதமாயின், 6 வருடத்திற்கும் இடமாற்றப்படுவார்கள்.

ஆசிரியர்களினால் அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியில்லாதவர்களின் இடமாற்ற விண்ணப்பங்கள் நீக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுமென்று மாகாண கல்வி பணிப்பாளர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .