2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மர்மப்பொருள் வெடித்தலில் ஒருவர் காயம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான், மயிலங்காடு பகுதியில் மர்மப் பொருளொன்று வெடித்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் தோட்ட வேளையில் ஈடுபட்டிருந்த 48 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் மண்வெட்டியில் அடிபட்டே இந்த மர்மப் பொருள் வெடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .