2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பாரதீய ஜனதா கட்சி எம்.பிக்கள் புதனன்று யாழ்.விஜயம்

Kogilavani   / 2013 ஜூன் 03 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் சுரெஸ் பாபு ஆகியோரே விஜயம் செய்யவுள்ளனர் என இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் விவேக் கயுதீப் மற்றும் இந்திய பவுண்டேசன் நிறுவனத்தின் உறுப்பினர்கள் இருவரும் வருகை தரவுள்ளனர்.

இக்குழுவினர்,  பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி உட்பட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .