2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

சுரேஷ் எம்.பியின் வாகனம் மோதியமையினால் இருவர் காயம்

Super User   / 2013 ஜூலை 18 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பயணித்த வாகனம் மோதியமையினால் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

வடமாராட்சி பகுதியில் இருந்து பருத்தித்துறை வீதியால் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தின் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள்  மோதியமையினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .