2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

ஊடகவியலாளர் மீது திருநெல்வேலியில் தாக்குதல்

Super User   / 2013 ஜூலை 28 , மு.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்,  சுமித்தி தங்கராசா

சுயாதீன ஊடகவியலாளர் சி.மயூரன் நேற்று சனிக்கிழமை மாலை தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் யாழ். திருநெல்வேலி கலாசாலை வீதியில் வைத்து வெள்ளை வானில் வந்த குழுவினாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலாசாலை வீதியில் உள்ள சனசமூக நிலையத்திற்கு முன்னால் தனது நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்த சி.மயூரன் போது, வெள்ளை வானில் வந்த ஐந்து பேர் அடங்கிய குழுவினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் ஊடகவியலாளர் மயூரன் உட்பட இருவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்களின் கூச்சலைக் கேட்ட அலயலர்கள் ஓடிவந்து தாக்குதலை மேற்கொண்ட கும்பலையும் அவர்களின் வாகனத்தையும் மடக்கிப்பிடித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .