2025 ஜூன் 21, சனிக்கிழமை

கோண்டாவில் விபத்தில் ஒருவர் காயம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


கோண்டாவில் மேற்கு அறிவியற் கழகத்திற்கு முன்னால் இடம்பெற்ற முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி, காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று புதன் கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. சுன்னாகத்தில் இருந்து காங்கேசன்துறை வீதி வழியாக வந்த மேற்படி முச்சக்கரண்டி, அதன் முன்னால் பயணித்துக்கொண்டிருந்த வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த வாகனமொன்றில் மோதியே விபத்துக்குள்ளானது.

இதனால் முச்சக்கர வண்டி சாரதி காயங்களுக்கு உள்ளானதுடன் முச்சக்கரவண்டியும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .