2025 ஜூன் 21, சனிக்கிழமை

குப்பிளான் தனியார் மினிபஸ் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

குரும்பசிட்டி, குப்பிளான் தனியார் மினிபஸ் சேவையானது அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காங்கேசன்துறை தனியார் மினிபஸ் சங்கத் தலைவர் எஸ்.இன்பம் தெரிவித்தார்.

மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின்ற போதிலும் குரும்பசிட்டிக்கான போக்குவரத்த சேவையானது சீர்; செய்யப்படாத நிலமை காணப்படுகின்றது.

இதனையிட்டு குப்பிளான் வரை இடம்பெறும் தனியார் மினிபஸ் சேவையை குரும்பசிட்டி வரை நீடிக்கும்படி தனியார் மினிபஸ் சங்கத்திடம்; மக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில்,  இந்த சேவை ஆரம்பிக்கப்படுகின்றது.

குப்பிளானில் இருந்து சுமார் இரண்டு கிலோமீற்றா தூரம் வரையான இந்த போக்குவரத்துபாதை சீர்செய்யப்;பட வேண்டிய நிலமையில் காணப்படுகின்றது.

வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இந்தப் பாதையின் இருமருங்கிலும் உள்ள பற்றைகள் வலி வடக்கு, வலி தெற்கு பிரதேச சபைகளினால் துப்பரவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .