2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் மருத்துவ முகாம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நா.நவரத்தினராசா


யாழ்ப்பாணத்தில் படையினரின் ஏற்பாட்டில்  மருத்துவ முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின்  ஆதரவுடன் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் கண், காது, மூக்கு,  பல் ஆகியவற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகளும்  நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஏனைய  நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

பல இடங்களிலிருந்தும் வந்த 300 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .