2025 ஜூன் 21, சனிக்கிழமை

அங்கஜனின் தந்தை கைது?

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தை ராமநாதனை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவரை கைது செய்வதற்கான உயர் மட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தையை கைது செய்வதற்கான உத்தரவு தனக்கு கிடைத்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .