2025 ஜூன் 21, சனிக்கிழமை

மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் படுகாயம்

Super User   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் படுகாயமடைந்த நிலையில்; யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகமாலை பகுதியில் இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 36 வயதான எல்.இளங்கேஸ்வரி என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

ஹலோ ட்ரஸ்ட் மிதிவெடி அகற்றும் பணியில் பணியாற்றும் குறித்த யுவதி, முகமாலை பகுதியில் மிதிவெடியினை அகற்றிக் கொண்டிருக்கும் போது மிதிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .