2025 ஜூன் 21, சனிக்கிழமை

இராமநாதனின் பிணை மனு ஒத்திவைப்பு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் சாhபில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு யாழ்.மேல் நீதிமன்றினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் கடந்த 27 ஆம் திகதி தேர்தல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, சாவகச்சேரி நீதிமன்றினால் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சதாசிவம் இராமநாதனின் பிணை மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி சாணக்க ரணதுங்க மற்றும் கனாதீபன் ஆகியோரினால் இம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி பிணை மனுவினை ஆராய்ந்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் பிணை மனு மீதான விசாரணையினை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைதார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .