2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வாகனங்களை கணக்கெடுத்து அறிவித்த பசில்

Super User   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வீதியில் பயணித்த வாகனங்களை  கணக்கெடுத்து பிரசார மேடையில் வைத்து அறிவித்த சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. ஏ-9 வீதியால் ஒரு மணித்தியாலயத்திற்குள் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிலெடுத்தே அவர் அறிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் சாவகச்சேரியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில்,

"இந்த மேடையில் இருந்தவாறு ஏ-9 வீதியில் பயணித்த  வாகனங்களை இதுவரை நேரமும் நான் கணக்கிலெடுத்தேன்.இந்த கூட்டத்திற்கு நான் இரவு 6.15 க்கு சமூகம் தந்தேன். 7.15 வரையிலான ஒரு மணி நேரத்திற்குள் இந்த வீதியில் எத்தனை வாகனங்கள் பயணித்தன என கணக்கிலெடுத்தேன்.

குறித்த ஒரு மணி நேரத்திற்குள் ஏ-9 வீதியில் 280 வாகனங்கள் பயணித்துள்ளன. இதில், பஸ்,லொறி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சகல வாகனங்களும் அடங்குகின்றன. இதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்த ஒரு மணி நேரத்திற்குள் இராணுவத்தின் ஒரு வாகனம் கூட பயணிக்கவில்லை என்பதை நான் அவதானித்தேன்" என்றார்.

You May Also Like

  Comments - 0

  • meenavan Tuesday, 10 September 2013 06:32 AM

    ஆம் உண்மை தான் குறிப்பிட்ட எல்லைகளுக்கு அப்பால் இராணுவ வாகனங்களை தரிக்க வைத்த பின்னர் உங்கள் கணக்கெடுப்பை..... நிகழ்த்தி அதன் நிகழ் தகவு பொருளாதார அபிவிருத்தி அமைச்சருக்கு சாதகம்....கூட்டம் முடிவடைந்து ஒரு மணியின் பின் கணக்கெடுப்பை நிகழ்த்தி இருந்தால் முடிவு நேர் மாற்றமாக அமைந்திருக்கும்....

    Reply : 0       0

    vALLARASU. Tuesday, 10 September 2013 04:06 PM

    நிலா நிலா ஓடி வா... நில்லாமல் ஓடி வா...மலையின் மேல் ஏரி வா/// சின்ன வயசில படித்த பாட்டு நினைவுக்கு வருதில்லே....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .