2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ். இளைஞர் சேவை மன்றப் பணிப்பாளர் பதவி நீக்கம்?

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் ரி.ஈஸ்வரராஜா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினாலே இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் சேவை மன்றத்தின் வேலைத்திட்டங்களிற்கு நிறுவனங்களினால் கொடுக்கப்படும் நிதியினை மோசடி செய்தார் மற்றும் அலுவலக வேலைகளில் அக்கறையின்றி தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டார் போன்ற காரணங்களுக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னரே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் யாழ்.கண்டி வீதியிலுள்ள இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பணிப்பாளர் கலந்துகொள்ளாததினைத் தொடர்ந்தே மேற்படி விடயம் வெளியில் வந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .