2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'புதிய பிரதேச சபைகளை உருவாக்க மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வடமாகாணத்தில் புதிய பிரதேச சபைகளை உருவாக்க வடமாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ராஜரட்ணம் வரகதீஸ்வரன் தெரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது,

உள்ளூராட்சி மன்றத்தின் தேவைக்கான வாகனங்கள் தொடர்பில் நாங்கள் ஏற்கனவே அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அதன் பிரகாரம் மன்னார் மாவட்;டத்திலுள்ள இரண்டு பிரதேச சபைகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய சபைகளுக்குரிய வாகனங்கள் படிப்படியாக வழங்கப்படும்.

உள்ளூராட்சி மன்றம் மாகாண சபைகள் அமைச்சுக்கு மானிப்பாய், உடுவில், நல்லூர் ஆகிய மூன்று பிரதேச சபைகளையும் நகர சபைகளாக மாற்றுவதற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும் இதுவரை எந்த நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அத்துடன் கண்டாவளை, ஒட்டுசுட்டான், மருதங்கேணி, மடு ஆகிய பிரிவுகளில் புதிய பிரதேச சபை உருவாக்கப்படவேண்டும் என ஒரு வருடங்களிற்கு முன்னர் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட போதும் அரசியல் காரணங்களுக்காக அது கிடப்பில் இருக்கின்றது.

அரச அதிகாரிகளால் இதனை உருவாக்க முடியாது.  இதனை மாகாண சபை அரசியல் பலத்தை பயன்படுத்தி இந்த புதிய சபைகளை உருவாக்கவேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .