2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பொலிஸ் வாகனத்தின் மீது கல் வீசிய இருவர் கைது

Super User   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில் பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று திங்கட்கிழமை தெரிவித்தனர்.

நாயன்மார்கட்டு பகுதியில் இரு குழுக்களிடையே கடந்த நவம்பர் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலினை தீர்ப்பதற்காக பொலிஸார் சென்றபோது, பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அப்பகுதி பொதுமக்களின் தகவலின் பிரகாரம் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை 11.30 மணியளவில் கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இரு நபர்களையும் பொலிஸ் விசாரணையின் பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .