2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அங்கஜனுக்கு மேலும் ஒரு மாத கால விடுமுறை

Super User   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன், எஸ்.கே.பிரசாத்

வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமனாதனுக்கு வட மாகாண சபையினால் மேலும் ஒரு மாத காலம் விடுமுறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து ஒரு மாத காலத்திற்கு விடுமுறை வழங்குமாறு வட மாகாண சபையிடம் மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளதாக தவிசாளர் கந்தையா சிவஞானம் சபையில் இன்று தெரிவித்தார்.

வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது. சொந்த விடயம் காரணமாக மேலும் ஒரு மாத காலத்திற்கு விடுமுறை வழங்குமாறு மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கு சபையில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமையினால் அவருக்கு ஒரு மாத கால விடுமுறை வழங்க சபை அனுமதியளித்தது. கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் டிசம்பர் 7ஆம் திகதி வரை  இராமநாதன் அங்கஜன் விடுமுறை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .