2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கோப்பாயில் இருவருக்கு சாட்சியமளிக்க மறுப்பு

Kanagaraj   / 2014 பெப்ரவரி 15 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


சொர்ணகுமார் சொரூபன்


காணாமல்போனோர் தொடர்பான விசாரனைகளை மேற்கொள்வதற்காக ஐனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் விசாரணைகள் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற போது காணாமற்போனோரின் 49 உறவுகள் சாட்சியமளித்ததாக ஆணைகுழு தலைவர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹம தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பில் காணாமற்போனோர் தொடர்பாக ஆணைக்குழுவினால் சாட்சியமளிக்க வருமாறு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்ட போதும், சாட்சியமளிக்க வந்த இருவர் சாட்சியமளிக்க மறுக்கப்பட்டனர்.

கோப்பாய் பிரதேச செயலகத்தின் கீழ் 93 பேர் பதிவுகளை மேற்கொண்டிருந்த போதும், 66 பேருக்கே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதிலும் 49 பேர் மட்டுமே நேற்று சாட்சியமளித்திருந்தனர். மேற்படி 49 பேரில் புதிததாகப் பதிந்த 6 பேரும் சாட்சியமளித்திருந்தனர்.

1995ஆம் ஆண்டு யூலை மாதம் 4ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு கொச்சிக்கடை தேவாலையதிற்கு முன்பாக தனது தம்பி காணவில்லை என்றும்  பெண்ணும், வெள்ளவத்தையில் காணாமற்போன ஒருவருடைய உறவினரும் இவ்வாறு சாட்சியமளிக்க வந்தனர்.

எனினும் 'இங்கு இடம்பெறுவது வட மாகாணத்திற்குட்பட்ட விசாரணைகள் எனவும் கொழும்பில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சிமளிக்க முடியாது' எனவும் விசாரணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டு அவர்கள் இருவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேற்படி சாட்சியமளித்தவர்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ளது என்று நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைகுழு தலைவர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹம தெரிவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .