2021 ஜூலை 31, சனிக்கிழமை

துறைமுகப் பிள்ளையார் கோவிலில் விக்கிரகங்கள் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா 

யாழ். காரைநகர் துறைமுகப் பிள்ளையார் கோவிலின்  மூல விக்கிரகமும் அங்கிருந்த மேலும் 3 விக்கிரகங்களும் திருட்டுப் போயுள்ளதென்று கோவில் தர்மகர்த்தா சபையினர் திங்கட்கிழமை (14) முறைப்பாடு செய்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

பாலஸ்தாபனம் செய்வதற்காக இவ்விக்கிரகங்கள் கோவிலின் உட்புறத்தில் தனியானதொரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களை, ஞாயிற்றுக்கிழமை (13) இரவு கோவிலின்  கதவை உடைத்துச் சென்று திருடிக்கொண்டு போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

இத்திருட்டு தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .