2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஆலய உண்டியலை உடைக்க முற்பட்டவர் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 28 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி, பாலை கிணற்றடி ஞானவைரவர் ஆலயத்தில் உண்டியலை உடைக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை வெள்ளிக்கிழமை (28) அதிகாலை கைது செய்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் உண்டியலை உடைக்கும் முயற்சியில் மேற்படி நபர் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, ஆலயத்தின் நிர்வாகத்தினர் கண்ணுற்று சந்தேகநபரை மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு, பொலிஸாரிடம் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .