2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தென்மராட்சியில் குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 12 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்

யாழ்.தென்மராட்சி பகுதியில் விவசாய பயிர்களையும், வீடுகளிலுள்ள பொருட்களையும் நாசம் செய்து வரும் குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மராட்சி பிரதேசத்தில் குரங்குகளின் அட்டகாசங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. குடிமனைகளுக்குள் நுழையும் குரங்குகள் மா, பப்பாசி, ஜம்பு உள்ளிட்ட பழ மரங்களிலுள்ள பழங்களை உண்டும், பயிர் நிலங்களிலுள்ள பயிர்களை சேதப்படுத்தியும், வீடுகளின் கூரைகளையும் உடைக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் விவசாய திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடம், வனவிலங்கு இலாகா அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து குரங்குகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்முற்கட்டமாக, குரங்குகள் அதிகளவில் எவ்வேளையில் வருகின்றன என்பதையும், கூட்டமாக அல்லது தனித்தனியாகவா? வருகின்றன என்பது தொடர்பிலும் பொதுமக்களிடம் இருந்தும் தரவுகள் பெறப்பட்டு வருகின்றன.

தரவுகளை கொண்டு குரங்குகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .