2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இரு ஆண்கள் பலி

Gavitha   / 2015 ஜனவரி 31 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா


யாழ். கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (31) சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியொன்றின் மீது மோதியதில் அதில் பயணித்த ஆண்கள் இருவரும் உயிரிழந்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர்கள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்கள் வைத்தியசாலையில் இன்னும் பதிவு செய்யப்படவில்லை.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .