2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரதம் இருந்த இருவர் மயங்கி விழுந்தனர்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவு தொடர்பில் வடமாகாணசபையின் நிபுணர் குழு அறிக்கையின் விளக்கத்தை எழுத்து மூலம் தருமாறு கோரி, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் உண்ணாவிரதம் இருந்த  8 பேரில் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (07) இரவு மயங்கி விழுந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் நீரில் நச்சுப்பதார்த்தங்கள் இல்லையென்றால், அந்நீரை பொதுமக்கள் பருக முடியுமா என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என்பது உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்றையதினத்திலிருந்து இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியபோதிலும்,  உண்ணாவிரதப் போராட்டத்தை தாங்கள் கைவிடமாட்டோம் எனக்கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X